தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது Block Educational Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. தற்போது இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு வயது வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
2019-2020 முதல் 2021-2022 வரை தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துணைப் பணியின் கீழ் உள்ள தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் தொகுதிக் கல்வி அதிகாரி பதவிக்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் 05.06.2023 அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த பதவிக்கு என மொத்தம் 33 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree மற்றும் B.Ed தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written examination மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, 01.07.2023 அன்றைய தினத்தின் படி, 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். தற்போது இந்த நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, General விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 40லிருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. BC, BCM, MBC/DNC, SC, SCA, ST மற்றும் DW விண்ணப்பதாரர்களுக்கு 45 ஆண்டுகளில் இருந்து 47 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம் 2016 இன் பிரிவு 64 இன் படி மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு 50 ஆண்டுகளில் இருந்து 52 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.