HomeBlogசென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச நேரடிப் பயிற்சி வகுப்பு
- Advertisment -

சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச நேரடிப் பயிற்சி வகுப்பு

சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச நேரடிப் பயிற்சி வகுப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடிப் பயிற்சி வகுப்புகள் இலவசமாக சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்க உள்ளன.

தேர்வர்கள் https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8 என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துச் சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்‌நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையங்களில்‌ உள்ள தன்னார்வ பயிலும்‌ வட்டங்கள்‌ மூலம்‌ போட்டித்‌ தேர்வுகளுக்கு தயாராகும்‌ தேர்வர்களுக்காக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ (டிஆர்பி) நடத்தப்படும்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்விற்கான அறிவிப்பு 2023 டிசம்பர்‌ மாதம்‌ வளியாக உள்ளது. மேலும்‌ இத்தேர்வு தொடர்பான விவரங்கள்‌ அறிந்துகொள்ள https://www.trb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்‌.

தகுதித்‌ தேர்வு காலிப் பணியிடத்திற்கான கல்வி, வயதுத் தகுதிகள் என்னென்ன?

1. கல்வித் தகுதி

முதல் தாள் – 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்ச்சி அல்லது கடைசி ஆண்டு டிப்ளமோ (+2 and passed or appearing in final year of 2 Years Diploma in Elementary Education)

இரண்டாம் தாள் – பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் பி.எட். தேர்ச்சி அல்லது கடைசி ஆண்டு பி.எட். படிப்பு

2. வயது வரம்பு

அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை.

இதனைத்‌ தொடர்ந்து சென்னை, கிண்டியில்‌ செயல்பட்டு வரும்‌ தொழில்சார்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்விற்கான கட்டணமில்லா நேரடி (ஆஃப்லைன்) பயிற்சி வகுப்புகள்‌ 21.08.2023 அன்று தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில்‌ வாரந்தோறும்‌ மாதிரி தேர்வுகளும்‌ நடத்தப்படவுள்ளன. இவ்வலுவலகத்தால்‌ நடத்தப்படவுள்ள TET முதல் தாள் மற்றும்‌இரண்டாம் தாள் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்‌ கலந்துகொள்ள Google Form link “https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8” என்ற இணைப்பை க்ளிக் செய்து தங்களின்‌ விவரங்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள்‌ அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்‌ – 9499966021 & 044-22501032.

மின்னஞ்சல் முகவரி: peeochn@gmail.com

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -