Join Whatsapp Group

Join Telegram Group

TN Govt. ஆன்லைனில் Employment Renewal செய்வது எப்படி? முழு விவரங்கள்

By Bharani

Updated on:

TN Govt. ஆன்லைனில் Employment Renewal செய்வது எப்படி? முழு விவரங்கள்

  •  ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை ஒரு நிமிடத்தில் எளிதாக புதுப்பிப்பது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். நீங்கள் முதலில் https://tnvelaivaaippu.gov.in/Empower/ என்ற இணையதளத்தில் செல்ல வேண்டும். பின் அதனுள் உங்கள் User Id மற்றும் Password ஆகியவற்றை கொடுத்து உள்ளே நுழைய வேண்டும்.
  • உங்கள் User ID என்பது Resigstation Number மற்றும் பாஸ்வோர்ட் என்பது உங்களுடைய பிறந்த நாள் தான். இதனை கொடுத்து நீங்கள் நுழையலாம். பொதுவாக Resigtration Number என்பது நீங்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்த மாவட்டம், எந்த வருடம். பாலினம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இருக்கும்.
  • எடுத்துகாட்டாக நீங்கள் தஞ்சையில் 1999-ம் ஆண்டு பதிவு செய்த நீங்கள் பெண்ணாக இருந்தால் TJD1999FXXXX உடன் 8 இலக்க எண் இருக்கும். அது தான் உங்கள் யூசர் ஐடி. பாஸ்வோர்ட் உங்கள் பிறந்த நாள் DD/MM/YR ஆகியவற்றை / குறி உடன் பதிவிட வேண்டும்.
  • அதன்பிறகு நிரந்தர பாஸ்வோர்டை நீங்கள் உருவாக்கி கொள்ள வேண்டும். ஒரு வேளை நீங்கள் உங்கள் பாஸ்வோர்டை மறந்து இருந்தால் Forget Password கொடுத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்.
  • நீங்கள் அனைத்து பதிவுகளையும் சரியாக கொடுத்து உள்ளே நுழைந்த உடன் உங்கள் பெயர் மற்றும் தரவுகள் இருக்கும் அதை வைத்து நீங்கள் உறுதிப்படுத்தி கொள்ளலாம்.இதையடுத்து Update Profile என்பதை கிளிக் செய்த உடன் Renewal என்ற ஆப்ஷன் உங்களுக்கு வரும் அதில் Candidate Renewal என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்தப்படியாக உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு Renewal ஆகி விடும். அடுத்த Renewal மாதம் மற்றும் வருடம் எப்போது என்ற விவரம் உங்களுக்கு தெரிய வரும். அவ்வளவு தான் எளிதாக ஆன்லைனில் Employment Renewal செய்து கொள்ளலாம்.

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]