Tissue Paper தயாரிப்பு
தொழில்
Tissue
Paper – இயந்திரம்:
டிஷ்யூ
பேப்பர் தயார் செய்வதற்கு machine அவசியம் தேவை.
விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள
லிங்க் மூலம் இயந்திரத்தை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
குறைந்த விலையில் பொருட்கள் வாங்கிட: Click
Here
Tissue
Paper – மூலப்பொருட்கள்:
Jumbo Roll Paper என்ற
மூலப்பொருள்தான் டிஷ்யூ
பேப்பர் தயார் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். இதனை
தாங்கள் ஆன்லைனில் ஆர்டர்
செய்து பெற்று கொள்ளலாம்.
Jumbo Roll Paper தரத்திற்கு ஏற்றது போல்
ஒரு கிலோ ரூபாய்
50 முதல் 70 ரூபாய் வரை
விற்கப்படுகிறது. மொத்தமாக
வாங்கிக்கொள்ளலாம்.
Tissue
Paper – டிஷ்யூ பேப்பரின் வகை:
டிஷ்யூ
பேப்பர் தயாரிப்பு தொழில்
பொறுத்தவரை நான்கு வகையான
டிஷ்யூ பேப்பர் தயார்
செய்யப்படுகிறது. அதாவது
சமையல் அறைக்கு மற்றும்
கேட்டரிங் பயன்படுத்தும் டிஷ்யூ
பேப்பர், பேசியல் செய்வதற்கு பயன்படுத்தும் டிஷ்யூ
பேப்பர், ஹேண்ட் கர்ச்சீப்
ஆக பயன்படுத்தும் டிஷ்யூ
பேப்பர் மற்றும் Toilet roll paper என்று
நான்கு வகையான டிஷ்யூ
பேப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.
Tissue
Paper – முதலீடு:
இடம்
வாடகை, இயந்திரம், மூலப்பொருட்கள், மின்சாரம் செலவு மற்றும்
இதர செலவுகள் என்று
குறைந்தபட்சம் முதலீடாக
ரூபாய் 6 லட்சம் தேவைப்படும்.
அரசு
வழங்கு மானியம்:
பாரதப்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாநில அரசின்
‘நீட்ஸ்’ திட்டம் அல்லது
பொது மானியத் திட்டம்
என ஏதாவது ஒன்றில்
இயந்திரம் வாங்கும் தொகைக்கு
மானியம் பெற வாய்ப்பு
உண்டு. இந்தத் தொழிலுக்கு நடைமுறை மூலதனமாக ஒரு
மாதத்துக்கு ரூ.2.50 லட்சம்
தேவைப்படும். இதற்கு தனியாக
வங்கிக் கடன் கிடைக்கும்.
Tissue
Paper – சந்தைவாய்ப்பு:
இன்றைக்கு
அதிகம் பயன்படும் பொருட்களில் ஒன்றாக டிஷ்யூ பேப்பர்
உள்ளது என்பதால். அதனை
சின்ன ஹோட்டல் முதல்
அனைத்திற்கும் பயன்படுத்துகின்றன, எனவே மார்க்கெட்டிங் செய்வதற்கு நாம் அதிகம்
அலைய வேண்டிய அவசியம்
இருக்காது. எனவே சிறிய
மல்லிகை கடை முதல்
பெரிய ஷாப்பிங் ஸ்டோரில்
நேரடியாக சென்று தாங்கள்
தயார் செய்த டிஷ்யூ
பேப்பரை விற்பனை செய்யலாம்.
Tissue
Paper – விற்பனை விவரம்:
பேப்பர்
ரோல் உற்பத்திக்குப்பிறகு பாக்கெட்
என்கிற கணக்கில் கணக்கிடப்படும். 1 கிலோ பேப்பர் ரோலில்
உற்பத்திக்குப்பின் 12 பாக்கெட்டுகள் டிஷ்யூ பேப்பர் கிடைக்கும். ஒரு பாக்கெட்டை தரத்திற்கு தகுந்தது போல் ரூபாய்
50 முதல் 150 வரை ரூபாய்
வரை விற்கலாம். மாதம்
60 ஆயிரம் வரை வருமானம்
பார்க்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் – Tissue Paper Business Registration:
R.O.C
Trade License
Uam
No Objection
Certificate
Sales tax
Factory license
I.e code
registration
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.