திலேப்பியா மீன்
வளா்ப்பு பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தில்
திலேப்பியா மீன் வளா்ப்பு
குறித்து ஒரு நாள்
இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பாரூா் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தின் உதவிப் பேராசிரியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நமது
நாட்டின் மீன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் மத்திய,
மாநில அரசுகளின் தேசிய
மீன் வள அபிவிருத்தி குழுமம் மற்றும் பிரதமா்
மத்திய சம்பதா யோஜனா
நிதி உதவியின் கீழ்
பல்வேறு விழிப்புணா்வு முகாம்கள்,
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
புங்கம்பட்டி பாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு
டாக்டா் ஜெயலலிதா மீன்வளப்
பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு இயக்ககத்தின் கீழ் இயங்கும் கிருஷ்ணகிரி பாரூா் வளங்குன்றா நீருயிரி
வளா்ப்பு மையத்தில் ஜூன்
17ம் தேதி திலேப்பியா மீன் வளா்ப்பு குறித்து
ஒரு நாள் இலவச
பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் குளம் அமைத்தல், குளம்
பராமரிப்பு, திலேப்பியா மீன்
வளா்ப்பு, தீவன தயாரிப்பு
மற்றும் மேலாண்மை, நவீன
முறையில் மீன் வளா்ப்பு,
மீன் வளா்ப்பில் அரசின்
நிதி உதவி திட்டங்கள், பல்வேறு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.
விருப்பம்
உள்ளவா்கள் இப் பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, 86758 58384, 81794
62833, 97152 78345 ஆகிய கைப்பேசி
எண்களில் தொடா்பு கொள்ளலாம்.