சமுதாய வளா்ச்சிக்கு பாடுபடுவோர் மாநில இளைஞா்
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சமுதாய
வளா்ச்சிக்குப் பாடுபடும்
இளைஞா்கள் மாநில இளைஞா்
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் சமுதாய
வளா்ச்சிக்குப் பாடுபடும்
இளைஞா்களின் பணியை அங்கிகரிக்கும் வகையில் மாநில இளைஞா்
விருது வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டு
இந்த விருது 15 முதல்
35 வயது வரையுள்ள தலா
3 ஆண்கள், பெண்களுக்கு வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த
விருது பெற சமுதாய
நலனுக்காக தன்னார்்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். உள்ளூா்
மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில்
கொள்ளப்படும்.
திருவள்ளுா் மாவட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும்
மாவட்ட தோவுக் குழு
மூலம் பரிசீலனை செய்து,
அதில் சிறப்பாகச் சேவை
புரிந்த ஒரு ஆண்,
ஒரு பெண் மட்டுமே
மாநில தோவுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். https://www.sdat.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம்
வருகிற மே 5-ஆம்
தேதிக்குள் விண்ணப்பித்து பயன்
பெறலாம்.