TAMIL
MIXER EDUCATION- ன்
கல்வி
செய்திகள்
குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் பெயரை பதிவு
செய்து கொள்ளலாம்
அகில
இந்திய குடிமைப் பணி
தேர்வு பயிற்சி மையத்தில்
சேர்ந்து படிக்க விரும்பும், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் தங்கள் பெயரை
பதிவு செய்து கொள்ளலாம்
என, தலைமைச் செயலர்
இறையன்பு தெரிவித்துள்ளார்.
சென்னை
பசுமை வழி சாலையில்,
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம்
செயல்படுகிறது. இங்கு
முதன்மைத் தேர்வு எழுதும்
தேர்வர்களுக்கு, பயிற்சியுடன் மாதம் 3,000 ரூபாய் ஊக்கத்
தொகை வழங்கப்படுகிறது.
தமிழக
மாணவர்கள் எங்கும் பயிற்சி
பெற்று, முதல்நிலைத் தேர்வில்
வெற்றி பெற்றிருந்தாலும், இந்த
பயிற்சி மையத்தில் பயிற்சி
பெற அனுமதிக்கப்படுவர்.
இந்த
மையத்தில் இந்த ஆண்டு,
225 பேர் தங்கி படிக்க
வசதிகள் செய்யப்பட்டுள்ளன.அகில
இந்திய குடிமைப் பணித்
தேர்வு பயிற்சி மையத்தில்
சேர விரும்பும் தேர்வர்கள், இன்று மாலை 6:00 மணி
முதல், 27ம் தேதி
மாலை 6:00 மணி வரை,
www.civilservicecoaching.com என்ற
இணையதளத்தில், தங்கள்
விபரங்களை பதிவு செய்யலாம்.இட
ஒதுக்கீட்டின்படி, தேர்வு
செய்யப்பட்ட தேர்வர்கள் விபரம்,
வரும் 28ம் தேதி
மாலை 6.00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.
அடுத்த
இரண்டு நாட்கள் சேர்க்கை
நடப்பதோடு, ஜூலை 1 முதல்
வகுப்புகள் துவக்கப்படும். அரசு
விதிகளுக்கு உட்பட்டு, பதிவு
செய்தவர்களில் 225 பேர்
தேர்வு செய்யப்பட்டு, தங்கும்
வசதிகளுடன், குடிமைப்பணி முதன்மைத்
தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.