கொரோனா தடுப்பூசி
போட்டவர்கள் இரத்த தானம்
செய்யக் கூடாது
CORONA தொற்று கடந்த 2019-ஆம்
ஆண்டு இறுதியில் ஆரம்பித்து 2020 மார்ச் மாத
தொடக்கத்தில் அதன்
முழு உச்சத்தை அடைந்தது.
இந்த தொற்றினால் பல
லட்சக்கணக்கான மக்கள்
பாதிப்படைந்தனர். நோய்
தாக்கம் அதிகமாக இருந்த
சூழ்நிலையில் உலகம்
முழுவதும் ஊரடங்கு முறை
நடைமுறைப்படுத்தப்பட்டது.
CORONA நோய் பரவத் தொடங்கியதில் இருந்து பல முக்கிய
நாடுகளும் CORONA நோய்க்கான
தடுப்பூசியை கண்டிபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியது. தடுப்பூசி கடந்த
2020-ம் ஆண்டு இறுதியில்
கண்டுபிடிக்கப்பட்டது. CORONA தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனே
அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்காது என்று என்று
அரசு அறிவித்தது. அரசு
நிர்ணயித்துள்ள முன்னுரிமை வரிசையின் படி தான்
கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.
தேசிய
இரத்தமாற்ற சபை மற்றும்
மத்திய மனித மற்றும்
குடும்ப நல அமைச்சகம்
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
CORONA தடுப்பூசி (கோவிஷீல்டு அல்லது கோவாக்சின்) போட்டுக்
கொண்டவர்கள் தங்களின் இரண்டு
கட்ட தடுப்பூசிக்கு இடைப்பட்ட
காலத்திலும் மற்றும் இரண்டாம்
கட்ட தடுப்பூசி போட்ட
28 நாட்கள் வரையிலும் இரத்த
தானம் வழங்கக் கூடாது
என்று அறிவித்துள்ளது.