TAMIL
MIXER EDUCATION.ன்
தொழில் செய்திகள்
கூட்டு சலவைத்
தொழிலில் ஈடுபடுவோர் நிதியுதவி
பெற விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2022-2023ம்
ஆண்டுக்கான மானியக் கோரிக்கையாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோந்த மக்களின்
வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாட்டுக்காக சலவைத் தொழிலில் ஈடுபடும்
(ஆண், பெண்) குறைந்தபட்சம் 10 நபா்களைக் கொண்ட குழுவாக
அமைத்து, நவீனமுறை சலவையகங்கள் ஏற்படுத்தவும், சலவைத்
தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், செலவு மற்றும்
பணி மூலதனம் ஆகியவற்றுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு
ரூ. 3 லட்சம் வீதம்
வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குழு
உறுப்பினா்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் பயிற்சி
பெற்ற நபா்களை கொண்ட
குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழு
உறுப்பினா்கள் பிசி,
எம்பிசி மற்றும் சீா்மரபினா் இனத்தை சோந்தவா்களாகவும், குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம்
ரூ. 1 லட்சத்துக்குள்ளும் இருக்க
வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற ஆட்சியரகத்தில் உள்ள
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினா் நல
அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து
அளிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் ஆட்சியா் தலைமையிலான தோவுக்
குழுவினரால் தோவு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீா்மரபினா் நல இயக்ககத்துக்கு அனுப்பப்படும்.
மேற்காணும் திட்டத்தில் தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீா்மரபினா் இன மக்கள்
விண்ணப்பித்து பயன்பெறலாம்.