NEET
நுழைவு தேர்வுக்கு வயது
உச்சவரம்பு எதுவும் இல்லை
NEET தேர்வு எழுத வயது
உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என ஆணையம்
தெரிவித்துள்ளது.
தேசிய
மருத்துவ ஆணையம் NEET-UG தேர்வில்
கலந்துகொள்வதற்கான உச்ச
வயது வரம்பைத் நீக்கம்
செய்யும் முடிவை அறிவித்தது.
முன்னதாக,
பொதுப் பிரிவினருக்கு 25 வயதும்,
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதும் NEET-UG தேர்வில்
கலந்து கொள்ள அதிகபட்ச
வயது வரம்பு இருந்தது.
தேசிய
தேர்வு முகமைக்கு, டாக்டர்
புல்கேஷ்குமாருக்கு எழுதிய
கடிதத்தில், NMC செயலாளர், NEET-UG இன்
தகவல் அறிக்கையில் இருந்து
அதிகபட்ச வயது வரம்புகளை
நீக்குமாறு ஏஜென்சியிடம் கேட்டுக்
கொண்டார்.
கடந்த
ஆண்டு அக்டோபரில் நடந்த
4வது என்எம்சி கூட்டத்தில், NEET-UG தேர்வில் கலந்து
கொள்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச
வயது வரம்பு எதுவும்
இருக்கக் கூடாது என
முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை
தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தகவல் அறிக்கையில் அதற்கேற்ப மாற்றியமைக்கப்படலாம்.