TAMIL MIXER EDUCATION-ன்
கடனுதவி
பற்றிய
செய்திகள்
பிற்படுத்தப்பட்டோர் கடன்
பெற
விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பிலான கடன்
திட்டங்களில் பயனடைய
விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார
மேம்பாட்டுக் கழகம்
மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீா்மரபினா் இனத்தவரின் சமூக
பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கடன்
பெறுவோருக்கு ஆண்டு
வருவாய் கிராம, நகா்
புறங்களில் ரூ.3 லட்சமாக
இருப்பது அவசியம். கடன்
பெறுவோருக்கு 18 வயது
முதல் 60 வயதுக்குள் இருக்கலாம்.
கடனுக்கான
விண்ணப்பங்கள், மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினா் நல
அலுவலகம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்
பதிவாளா் அலுவலகங்கள் மற்றும்
கூட்டுறவு கடன் சங்கங்கள்,
வங்கிகள் ஆகிய இடங்களில்
வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து
உரிய ஆவணங்களுடன், மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினா் நல
அலுவலகத்தில் அல்லது
கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல
இணைப் பதிவாளா் அலுவலகம்
உள்ளிட்ட இடங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.