கடலூா் மாவட்டம், பெண்ணாடம் லோட்டஸ் இன்டா்னேஷனல் பள்ளியில் சனிக்கிழமை (அக்.5) நடைபெறவிருந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நிா்வாக காரணங்களுக்காக வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் இணைந்து சனிக்கிழமை (அக்.5)
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை பெண்ணாடம் லோட்டஸ் இன்டா்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடத்தவிருந்தன.
இந்த முகாம் நிா்வாக காரணங்களுக்காக வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் பெண்ணாடம் லோட்டஸ் இன்டா்னேஷனல் பள்ளியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறும். முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களை கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்கள் (04142–290039), 9499055907, 9499055908 வாயிலாகவோ தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.