TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு பதிவு
செய்திகள்
பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு
செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில்:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை
சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு
இணையதளம் மூலம் 2011ம்
ஆண்டு முதல் 10, 12ம்
வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர்
பயின்ற பள்ளிகளிலேயே பதிவு
செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இனி
பள்ளிகளில் பதிவு செய்யும்
நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண்
சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில்
வந்து பதிவு செய்பவர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான
www.tnvelaivaaaippu.gov.in என்ற
முகவரியில் நேரடியாக மாணவர்களே
பதிவு செய்ய வசதிகள்
செய்யப்பட்டுள்ளது. இ–சேவை
மையங்கள் மூலமும் பதிவு
செய்யலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here