ஆன்லைனில் பணத்தை
இழந்த நபர..?
உடனே இந்த இலவச
எண்ணை தொடர்பு கொண்டு
புகார் செய்யவும்
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
தருமபுரி
மாவட்டம் பாலக்கோடு
பகுதியை சேர்ந்த பாபு
என்பவர் JIO Mart –ல் பொருளை
வாங்கி அதற்கான பணத்தை
Amazon Pay மூலமாக செலுத்திய போது,
ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு
காரணமாக ஆன்லைனில் Customer Care எண்ணை
தேடி தவறான Customer Care எண்ணை
அழைத்ததில் அவர்கள் அவருடைய
மொபைலில் Anydesk App-யை
பதிவிறக்கம் செய்ய சொன்னதாகவும் அவர் அதை
செய்த சிறுது. நேரத்தில் அவரின் வங்கி
கணக்கில் இருந்து
ரூபாய் 2,08,740 பணம் காணாமல் போனதை
அறிந்துள்ளர். காணாமல் போன
பணத்தை மீட்க உடனடியாக
இது சம்மந்தமாக www.cybercrime.gov.in என்ற
சைபர் கிரைம் இணையதளத்தில். புகாரை பதிவு
செய்தார். புகாரை
பெற்றவுடன், தருமபுரி
சைபர் கிரைம் போலீஸார் பணம் மீட்பு
நடவடிக்கை மேற்கொண்டதில் உடனடியாக
ரூபாய் 1,83,923 பணம் மீட்கப்பட்டது. அதை தருமபுரி மாவட்ட
காவல் அலுவலகத்தில் வைத்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்கள் பணத்தை
பாபு என்பவரிடம் ரூபாய் 1,83,923 பணத்தை
ஒப்படைத்தார்.
பின்பு
இதுபோன்ற ஆன்லைன் பண மோசடி
புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற
இணையதளத்தில் புகாரை
பதிவு செய்யவும் அல்லது.
1930 என்ற சைபர் கிரைம் உதவி
எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு
உங்கள் Mobile போனில் Any desk,Team
Viewer போன்ற செயலிகளை எவரேனும் பதிவிறக்கம் செய்ய சொன்னால் செய்ய
வேண்டாம். என்றும், ஆசை
வார்த்தை கூறி முதலீடு
செய்ய சொன்னால் நம்ப
வேண்டாம் என்றும், மேலும் குறைந்த
விலைக்கு பொருட்களை வாங்க
ஆசைப்பட்டு ஏமாற வேண்டாம். என்றும், போலியான
வரும் அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் நம்பி உங்களது
வங்கி கணக்கின் தகவல்களான
ATM Pin, Mobile Pin, OTP போன்ற விவரங்களை செல்போனில் யாரிடமும் பகிர
வேண்டாம் என
அறிவுறுத்தியுள்ளார்.