வீட்டில் இருந்தபடியே சுய தொழிலில் லாபம் ஈட்ட கப் சாம்பிராணி செய்யும் முறை
கப் சாம்பிராணி செய்ய முக்கிய பொருட்கள்:
கரித்துகள்கள்
ஜிகட்
மரத்தூள்
சாம்பிராணி
வாசனை திரவியம்
yy Chemical
ஒரு பாக்கெட்டிற்கு 12 Cup சாம்பிராணி பீசஸ் வைக்கலாம். கப் சாம்பிராணி செய்யும் Machine ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கிடைக்கின்றது.
கப் சாம்பிராணி Machine ஆரம்ப விலை ரூ. 20,000/- இயந்திரத்தை வைப்பதற்கு வீட்டின் சிறிய இடம் போதுமானது
அட்டை பெட்டி இதர செலவுகள் அனைத்தும் சேர்த்து ரூ. 30,000/- ஆகும். இந்த தொழில் துவங்க மொத்தமாக ரூ.50,000/- இருந்தால் போதும்.
இந்த இயந்திரத்தை வைப்பதற்கு வீட்டின் சிறிய இடம் போதுமானது.
கப் சாம்பிராணி தொழில் செய்யும் முறை:
முதலில் முக்கிய பொருள்கள் அனைத்தையும் காயவைத்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக கலந்து தட்டில் அந்த கலவைகளை வைத்துக்கொள்ளவும். துகள்களை அந்த ஓட்டையின் உள் செலுத்தி அந்த கை பிடியினை ஒரு முறை சுற்றி அழுத்திவிட வேண்டும். அழுத்தி விட்ட பிறகு அந்த மிஷினில் கப் சாம்பிராணியானது ரெடி ஆகிவிடும்.
முக்கிய பொருள் கிடைக்கும் இடம்:
சென்னை, திருச்சி(பேருந்து நிலையம் அருகில்), மதுரை(மீனாட்சி அம்மன் கோவில் பின்புறம்), சேலம்(பழைய பேருந்து நிலையம் அருகில் கணக்கர் தெரு) இந்த பகுதிகளில் கப் சாம்பிராணி செய்வதற்கான முக்கிய பொருள்கள் கிடைக்கின்றன.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.