ஜேஇஇ பிப்ரவரி
தேர்வு முடிவு மார்ச் 7-ம் தேதி வெளியாகிறது
ஜேஇஇ
பிப்ரவரி மாதத்துக்கான தேர்வின்
முடிவுகள் மார்ச் 7-ம்
தேதி வெளியிடப்படும் என்று
தேசிய தேர்வு முகமை
(என்டிஏ) அதிகாரிகள் தகவல்
தெரிவித்துள்ளனர்.
நாடு
முழுவதும் உள்ள ஐஐடிகள்,
என்ஐடிகள் போன்ற மத்திய
உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை
படிப்புகள் சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ)
தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, நடப்பு ஆண்டில்
இருந்து ஆண்டுக்கு 4 முறை
தமிழ் உட்பட 13 மொழிகளில்
முதல்நிலை தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி,
முதற்கட்டமாக பிப்ரவரி
மாதத்துக்கான தேர்வுநாடு முழுவதும் 23-ம் தேதி
தொடங்கி, 26-ம் தேதி
வரை நடைபெற்றது.
இதுதொடர்பாக என்டிஏ
அதிகாரிகள் கூறியதாவது:
பிப்ரவரி
மாதத்துக்கான ஜேஇஇ
தேர்வு எழுத மொத்தம்
6 லட்சத்து 61,776 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, பி.இ.,
பி.டெக்., படிப்புகளுக்கான முதல் தாளை 95 சதவீத
மாணவர்களும் பி.ஆர்க்.,
பி.பிளான் படிப்புகளுக்கான 2-ம் தாளை 81.2 சதவீத
மாண வர்களும் எழுதினர்.
15-ம் தேதி
மார்ச் மாத தேர்வு
இந்நிலையில், தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்,
முடிவுகள் எப்போது வெளியாகும் என்று பல மாணவர்கள்
தொடர்ந்து என்டிஏ–வை
அணுகி வருகிறார்கள். அதன்படி,
ஜேஇஇ பிப்ரவரிதேர்வுக்கான மதிப்பெண்
பட்டியல் ஓரிரு நாட்களில்
வெளியிடப்படும்.
அதேபோல்,
தேர்வு முடிவு மார்ச்
7-ம் தேதி வெளியாகும். இதனைத்தொடர்ந்து, மார்ச்
மாதத்துக்கான ஜேஇஇ
தேர்வு 15-ம் தேதி
தொடங்கி 18-ம் தேதி
வரை நடக்கவுள்ளது.
கூடுதல்
தகவல்களை https://jeemain.nta.nic.in/
என்ற இணையதளம் மூலம்
மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.