சீருடை பணியாளர்
தேர்வுக்கு நாளை இலவச
பயிற்சி
துவங்குகிறது
சீருடை பணியாளர்
தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி
வகுப்பு, நாளை துவங்குகிறது.
தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், எஸ்.ஐ.,
இரண்டாம் நிலை போலீஸ்,
சிறைக்காவலர், தீயணைப்பு
அலுவலர்களுக்கான பயிற்சி
வகுப்புகள் நடக்கிறது.தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வுக்குழு சார்பில், துணை ஆய்வாளர்
444 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நடக்கிறது.
இத்தேர்வுக்கு, www.tnusrbonline.org
என்ற இணையதளத்தில், ஏப்.,
7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், 11 பணியிடங்களுக்கான தேர்வும் அறிவிக்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு
மையத்தில், போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு,
நாளை (1ம் தேதி)
துவங்குகிறது. இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் நேரிலோ, 0421 2999152 என்ற எண்ணிலோ
முன்பதிவு செய்து கொள்ளலாம்.