இறப்பு சான்றிதழ்
ஆன்லைனில் ஈஸியா வாங்கலாம்
- முதலில் https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx#!
என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்புபகுதியில் Death Details என்று
இருக்கும் அதில் கிளிக்
செய்ய வேண்டும். அதை
கிளிக் செய்த உடன்
Apply Death Registration என்று காண்பிக்கப்படும் அதை
பூர்த்தி செய்ய வேண்டும். - மாவட்டம், நகர
பஞ்சாயத்து, மின்னஞ்சல் முகவரி,
தொலைபேசி எண் ஆகியவற்றை
உள்ளீடு செய்ய வேண்டும்.
அடுத்து இறந்த நபரை
(Death Person Information) பற்றிய தகவலை
உள்ளீடு செய்ய வேண்டும். - அவரின் நிரந்தர
முகவரி தகவலை (Permanent Address
Information) கொடுக்க வேண்டும். அடுத்து
எந்த இடத்தில் அந்த
நபர் இறந்தார் (Place of Death) என்ற
தகவலை கொடுக்க வேண்டும். - அடுத்து அவரின்
முகவரி / நோய் பற்றிய
விவரங்களை (Address/Disease Details) கொடுக்க
வேண்டும். - அங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர்
Submit பட்டனை கிளிக் செய்ய
வேண்டும். - அதன் பிறகு
உங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு
ஒப்புகை எண் (Acknowledgement
Number) வரும். அதனை கொண்டு
மீண்டும் Death Details -> Track Death
Registration-ஐ கிளிக் செய்து
உங்களுடைய Request No அல்லது
தொலைபேசி எண் தகவல்களை
நிரப்பிய பின்னர் Generate பட்டனை
கிளிக் செய்தால் இறப்பு
சான்றிதழ் (Death Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.