ரூ.15,000க்கும்
குறைவான மாத ஊதியம்
பெரும் ஊழியர்களின் PF
தொகையை மத்திய அரசு
செலுத்தும்
அரசு
மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து
அவர்களின் எதிர்காலத்திற்காக ஒரு
குறிப்பிட்ட சதவீதத்தை சேமிக்கிறது.
இதன்
ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை
மத்திய அரசு செலுத்தும். கடந்த மார்ச் மாதத்தில்
இருந்து CORONA ஊரடங்கு
முறை அமலில் உள்ளதால்
தொழிலதிபர்கள் மற்றும்
ஊழியர்கள் அனைவரும் கடுமையான
பொருளாதார நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
கோவை
மண்டல PF., கமிஷனர்
ஜெய்வர்தன் இன்க்லே அவர்கள்
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்:
தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, ஊரடங்கு
காலத்தில் ஏற்பட்ட பொருளாதார
பின்னடைவை புதுப்பிக்கவும், பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்கவும்,
தொற்றினால் இழந்த வேலைவாய்ப்பை மீட்டெடுத்து, புதிய
வாய்ப்பை உருவாக்கி ஊக்கப்படுத்தவும், மத்திய அரசு
‘சுய சார்பு இந்திய
வேலை வாய்ப்பு திட்டம்’
என்ற புதிய திட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் பலனாக, 1000 தொழிலாளர்கள் வரை
பணியாற்றும் நிறுவனங்களாக இருந்தால்
தகுதி வாய்ந்த தொழிலாளர்களின் (UAN) எண்ணுக்கு 24 மாதங்களுக்கான தொழிலாளர் மற்றும் தொழிலதிபரின் PF., பங்களிப்பு தொகையை
மத்திய அரசு செலுத்தும்.
மேலும்,
1000 தொழிலார்களுக்கு மேல்
இருந்தால், தகுதியான தொழிலாளர்களுக்கு PF., தொகையை
அரசு ஏற்றுக் கொள்கிறது.
இந்த
சலுகை ரூ.15,000க்கும்
குறைவான மாத ஊதியம்
பெரும் தொழிலாளர்களுக்கு மட்டுமே
பொருந்தும். இத்திட்டத்தில் பயன்பெற
கடந்த 2020 அக்டோபர் 1-ம்
தேதி முதல், 2021 ஜூன்
மாதம் 30ம் தேதி
வரை தகுதி உள்ள
தொழிலதிபர்கள் மற்றும்
புதிய தொழிலாளர்களை பதிவு
செய்து கொள்ளலாம் என்று
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.