தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் தேர்வில் வெற்றி பெற்ற பலர் வேலைக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தற்போது அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பபட்டுள்ளது. தற்போது அரசு பணிக்காக சுமார் 80,000 ஆசிரியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு வேலை வழங்குவது தொடர்வாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் துவரை வாரியான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.