தமிழக அரசின்
கட்டணமில்லா பயிற்சிக்கான நுழைவுத்
தேர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு
தமிழக
அரசின் அகில இந்திய
குடிமைப்பணித் தேர்வுப்
பயிற்சி மையத்தின் கட்டணமில்லா பயிற்சிக்கான நுழைவுத்
தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக
அரசின் அகில இந்திய
குடிமைப்பணித் தேர்வுப்
பயிற்சி மையம், சென்னை
மற்றும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப்
பயிற்சி நிலையங்கள், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய
பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பட்டதாரிகள் மற்றும்
முதுநிலைபட்டதாரிகள் ஆகியோருக்கு, மத்திய தேர்வாணையம் நடத்தும்
குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு
ஜூன் 2022 ஆம் ஆண்டிற்கு
கட்டணமில்லாப் பயிற்சி
அளிப்பதற்கு நுழைவுத்தேர்வு 23.01.2022 அன்று
நடைபெறவிருந்தது அதன்படி
தமிழ்நாட்டை சார்ந்த ஆர்வலர்களிடமிருந்து இணையதளம் மூலமாக
8704 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது.
மேற்கண்ட
நுழைவுத்தேர்வானது 23.01.2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை
10.30 மணியளவில் தமிழகத்தில் 18 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, கரோனா
வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக
தமிழக அரசு மாநிலம்
முழுவதும் 31.01.2022 வரை
தளர்வுகளுடன் கூடிய
ஊரடங்கு அறிவித்துள்ளது.
மேலும்
கரோனா பெருந்தொற்றின் காரணமாக
ஆர்வலர்களின் நலன்
கருதி இப்பயிற்சி மையத்தால்
23.01.2022 அன்று நடைபெற இருந்த
முதல்நிலைத் தேர்வு பயிற்சி
வகுப்பிற்கான நுழைவுத்
தேர்வானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
தேர்வு
நடைபெறும் நாள் பின்னர்
அறிவிக்கப்படும். மேலும்
அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய
இணையதளம் www.civilservicecoaching.com மற்றும்
தொலைபேசி 044-24621475 வாயிலாக
ஆர்வலர்கள் அறிந்துகொள்ளலாம்