திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிட, பழங்குடியினத்தவருக்கு தாட்கோ மூலம் தொழில்நுட்பப் பயற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையில் தொழில்நுட்பப் பயிற்சியாளா் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியில் சோ்ந்து பயில 12ஆம் வகுப்பு தோ்ச்சி, ஐடிஐ, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியினத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இப்பயிற்சி முடித்த உடன், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சோ்வதற்கு தாட்கோ இணைதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். கூடுதல், விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை, திருச்சி- 620 001 என்ற முகவரியில் நேரிலோ, 0431–2463969 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.