விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெற்றோரை இழந்த குழந்தைகள், அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விழுப்புரம், சாலாமேட்டில் உள்ள அரசு குழந்தைகள் இல்லம், விழுப்புரம், கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆண் குழந்தைகள் தங்கி கல்வி பயில சமூக பாதுகாப்பத் துறையின் கீழ், செயல்பட்டு வருகிறது.
இவ்வில்லத்தில் 84 ஆண் குழந்தைகள், வரவேற்பு பிரிவில் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் என, 98 குழந்தைகள் தங்கி கல்வி பயில்வதற்கு இடவசதி உள்ளது.இல்லத்தில் 6 வயது முதல் 18 வயது வரை 1ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை தங்கி படிப்பதற்கும் உணவு, தொழில் சார்ந்த பயிற்சிகள் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகின்றது.
இல்ல வளாகத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலும், 9 முதல் 10ம் வகுப்பு வரை விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று வருகின்றனர்.
எனவே, பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி, கல்வி பயில விரும்புவோர், விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலெக்டர் அலுவலக வளாக முகவரியிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் 04146 – 290659 என்ற தொலைபேசி எண்ணையும், தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.