TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் – பணியாளர்களுக்கு
ரூ.
1000 ஊக்கத்தொகை
உயர்வு
தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று
காலத்தின்
போது
விதிக்கப்பட்ட
ஊரடங்கால்
பொதுமக்கள்
வீட்டை
விட்டு
வெளியேற
தடை
விதிக்கப்பட்டது.
இதனால் அரசு மருத்துவமனைகளில்
மாதந்தோறும்
சர்க்கரை
நோய்
உள்ளிட்ட
நோய்களுக்கு
மருந்து
மற்றும்
மாத்திரைகள்
பெறுவோர்கள்
மருத்துவமனைக்கு
செல்ல
முடியாத
சூழல்
ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின்
மூலம்
தற்போது
சர்க்கரை,
உயர்
ரத்த
அழுத்தம்
உள்ளிட்ட
நோய்களால்
பாதிக்கப்பட்ட
சுமார்
1 கோடி
பேர்
பயனடைந்து
வருவதாக
மக்கள்
நல்வாழ்வுத்துறை
அமைச்சர்
தகவல்
தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு
ஊக்கத்தொகை
உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று
திருச்சி
மாவட்டத்தில்
நடைபெற்ற
மக்களை
தேடி
மருத்துவ
திட்ட
நிகழ்ச்சியில்
பங்கேற்ற
முதல்வர்
ஒரு
கோடியே
ஒன்றாவது
பயனாளிக்கு
மருத்துவ
பெட்டகத்தை
வழங்கினார்.
அப்போது பேசிய அவர் இத்திட்டத்தின்
கீழ்
பணியாற்றும்
சுமார்
20,000 ஊழியர்களுக்கு
ஊக்கத்தொகை
ரூ.
1000 உயர்த்தி
அறிவித்துள்ளார்.