தமிழக அரசு
தட்டச்சர் பணி பதவி
உயர்வு – புதிய விதிகள்
தமிழக
அரசின் கீழ் செய்லபடும் அரசு அலுவலகங்களில் பணியாற்றி
வரும் தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்க
தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிமுறையின் கீழ் திருத்தம் கொண்டு
வரப்பட்டது.
இந்த
திட்டம் காரணமாக இளநிலை
உதவியாளராக பயிற்சி பெறாத
தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டதால் பணிக்கு இடையூறு ஏற்படும்
என்பதால் பயிற்சி பெறாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட
மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்
காரணமாக இந்த அறிவிப்பின் கீழ் பதவி உயர்வு
பெற கண்டிப்பாக ஓராண்டுகள் இளநிலை உதவியாளர் பயிற்சி
பெற வேண்டும். இந்த
அறிவிப்பு காரணமாக பணி
மூப்பின்படி பதவி உயர்வு
பெற வரிசையில் இருப்பவர்களுக்கு கட்டாயம் ஓராண்டு
பயிற்சி வழங்க வேண்டும்
என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை
பதவி மூப்பு அடிப்படையில் இருந்தவர்களுக்கு நேரடியாக
பதவி உயர்வு வழங்கப்பட்டு உதவியாளராக நியமிக்கப்பட்டனர். தற்போது
ஓராண்டுகள் பயிற்சி வழங்க
வேண்டும் என கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.