HomeBlogபயிற்சி மாணவர்களை கொண்டு தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பலாம் என தமிழக அரசு முடிவு -...
- Advertisment -

பயிற்சி மாணவர்களை கொண்டு தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பலாம் என தமிழக அரசு முடிவு – 10,331 பணியிடங்கள்

Tamil Nadu government has decided to fill temporary teacher posts with trainees - 10,331 posts

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

பயிற்சி மாணவர்களை கொண்டு தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பலாம் என தமிழக
அரசு
முடிவு10,331 பணியிடங்கள்

தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி,
நடுநிலைப்பள்ளி,
உயர்நிலைப்பள்ளி
மற்றும்
மேல்நிலைப்பள்ளியில்
இடைநிலை
ஆசிரியர்,
பட்டதாரி
மற்றும்
முதுநிலை
ஆசிரியர்
என
மொத்தமாக
10,331
காலிப்பணியிடங்கள்
உள்ளன.

பெரும்பாலும்
ஆசிரியர்
காலிப்பணியிடங்கள்
அனைத்தும்
ஆசிரியர்
தகுதி
தேர்வின்
அடிப்படையில்
தான்
நியமனம்
செய்யப்படுகின்றது.

ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில்
பணி
நியமனம்
செய்வதற்கு
கால
தாமதம்
ஆகும்
என்பதால்
தற்காலிக
ஆசிரியர்களை
நியமனம்
செய்யலாம்
என
அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான விண்ணப்பங்களும்
வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
ஆசிரியர்
தகுதித்
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களுக்கும்,
இல்லம்
தேடி
கல்வித்
திட்டத்தில்
பணியாற்றியவர்களுக்கும்
இந்த
தற்காலிக
ஆசிரியர்
பணியிடங்களுக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்
என
அரசின்
தரப்பில்
அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், முதுநிலை ஆசிரியர்களுக்கு
மாதந்தோறும்
ரூபாய்
7,500
சம்பளமும்,
பட்டதாரி
ஆசிரியர்களுக்கு
மாதந்தோறும்
ரூ
10,000
சம்பளமும்,
முதுநிலை
ஆசிரியர்களுக்கு
மாதத்திற்கு
12
ஆயிரம்
ரூபாய்
வழங்க
போவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதால் பெரிய அளவில் யாரும் விண்ணப்பிக்க
முன்வரவில்லை.
இதுவரைக்கும்
24
மாவட்டங்களில்
2000
பேர்
மட்டுமே
தற்காலிக
ஆசிரியர்
பணியில்
சேர
ஆர்வம்
காட்டியுள்ளனர்.

இதனால், B.Ed., M.Ed.,
பயிற்சி
மாணவர்களை
கொண்டு
தற்காலிக
ஆசிரியர்
பணியிடங்களை
நிரப்பலாம்
என
அரசு
முடிவெடுத்துள்ளது.
மேலும்,
இதற்கான
நடவடிக்கையில்
கல்வித்துறை
ஈடுபட்டு
வருகிறது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -