தமிழக சட்டமன்ற
தேர்தல் பயிற்சி வகுப்புகள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்
மாதம் 6 ஆம் தேதி
நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பணிக்கான
பயிற்சி வகுப்புகள் மார்ச்
18, மார்ச் 26 மற்றும்
ஏப்ரல் 3 மற்றும் 5ம்
தேதிகளில் நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி
ஏப்ரல் 6ம் தேதி
வாக்குப்பதிவு நடைபெறும்
என தலைமை தேர்தல்
அதிகாரி அறிவித்துள்ள நிலையில்,
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட
உள்ளனர். இந்நிலையில் தேர்தல்
பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்தல்
பணிகள் நான்கு கட்ட
பயிற்சி வழங்க வேண்டும்
என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர்கள் 12 ஆம் வகுப்பு
பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களை தயார்படுத்தும் பணியில்
ஈடுபட்டுள்ளனர். சனிக்கிழமைகளில் கூட பள்ளிகள் செயல்படுவதால் ஆசிரியர்கள் பணி சுமையில்
உள்ளனர். தற்போது சட்டமன்ற
தேர்தல் பணிகளுக்கான பயிற்சி
வகுப்புகள் நடைபெறும் தேதியை
தலைமை தேர்தல் அதிகாரி
வெளியிட்டுள்ளார்.
இந்த
வகுப்புகள் மார்ச் 8, மார்ச்
26 மற்றும் ஏப்ரல் 3 மற்றும்
5ம் தேதிகளில் நடைபெறும்.