சூயஸ் கால்வாயில் தரை தட்டிய தைவான்
சரக்கு கப்பல் – இருபுறமும் கப்பல்கள் தேக்கம்
செங்கடல்
பகுதியில் இருந்து தாய்வான்
நாட்டு சரக்கு கப்பல்
ஒன்று மத்திய தரைக்கடல்
பகுதிக்கு செல்ல சூயஸ்
கால்வாய் வழியாக சென்று
கொண்டிருக்கும் பொழுது
செவ்வாய்க்கிழமை காலை
7:40 மணிக்கு பக்கவாட்டில் தரை
தட்டியது.
2 லட்சத்து
24 ஆயிரம் டன் எடையுள்ள
கண்டெய்னர்ளை ஏற்றிக்கொண்டு வந்த எவர் க்ரீன்
என்ற சரக்கு கப்பல்
சூயஸ் கால்வாயில் சென்று
கொண்டிருக்கும்பொழுது திடீரென்று பலத்த காற்று கப்பலைத்
தாக்கியதாக கூறப்படுகிறது 40 நாட்
வேகத்தில் தாக்கிய சூறைக்காற்று காரணமாக கப்பல் பக்கவாட்டில் திரும்பியது.
சூயஸ்
கால்வாயின் மையப்பகுதியில் இருந்து
கப்பல் திசை திரும்பி
சென்ற காரணத்தினால் சூயஸ்
கால்வாயில் தரைதட்டி இருக்க
வேண்டும் என்று கருதப்படுகிறது.
கப்பலின்
முன் முகப்பு பகுதி
சூயஸ் கால்வாயில் கிழக்கு
சுவரிலும் கப்பலின் பின்
பகுதி மேற்கு சுவரிலும்
அடித்துக்கொண்டு நின்றது.
தரை
தட்டி நிற்கும் கப்பலுக்கு உதவியாக சூயஸ் கால்வாய்
நிர்வாகம் உடனடியாக 8 இழுவைப்
படகுகளை அனுப்பியது. இந்த
இழுவைப்படகுகள் ஒவ்வொன்றும் 160 டன் இழுவைத் திறன்
கொண்டதாகும்.
இந்த
இழுவை படகுகள் முயற்சி
செய்து வருகின்றன. அதே
நேரத்தில் கப்பலின் எடையை
குறைக்கும் வேலையிலும் இந்த
இழுவைப் படகுகள் உதவி
வருகின்றன.
தாய்வான்
அரசு எவர்கிரீன் என்ற
இந்தக் கப்பலை ஜி.ஏ.சி
என்ற கம்பெனியிடம் இருந்து
வாடகைக்கு எடுத்துள்ளது.
எவர்கிரீன் சரக்கு கப்பல் 1312 அடி
நீளமும் 193 அடி அகலமும்
கொண்டதாகும் அதில் 20 அடி
நீளம் உடைய 20,000 கன்டெய்னர்களை அடுக்க முடியும்.
கடுமையான
காற்று தாக்கிய காரணத்தால் கப்பலில் மின் வினியோகம்
பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது அதேநேரத்தில் காற்றின்
தாக்குதல் காரணமாக கப்பல்
குறுக்கே திரும்பி விட்டது.
விபத்தில்
சிக்கிய எவர்கிரீன் கப்பலை
மீட்க சூயஸ் கால்வாய்
நிர்வாகமும்
ஜி ஏ சி
கப்பல் கம்பனியும் இணைந்து
முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சூயஸ்
கால்வாய் 1869-ஆம் ஆண்டு
துவக்கப்பட்டது அது
துவக்கப்பட்ட நாளில்
இருந்து இதுவரை இத்தகைய
விபத்தை சந்தித்ததில்லை.
கால்வாயின் குறுக்கே ராட்சஸ சரக்கு
கப்பல் ஒன்று தரை
தட்டி நிற்கும் செங்கடலில் இருந்து வரும் கப்பல்களும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் இருந்து வரும் கப்பல்களும் செல்ல முடியாமல் தேங்கி
நிற்கின்றன.
சூயஸ்
கால்வாய் நிர்வாகம் உடனடியாக
கப்பல்களை பழைய கால்வாயில் செல்லும் வழி வேண்டுகோள் விடுத்துள்ளது சாதாரணமாக
ஒரு நாளைக்கு 52 கப்பல்கள்
சூயஸ் கால்வாயின் வழியாக
செல்வது வழக்கம்.
சூயஸ்
கால்வாயில் கப்பல் தரைதட்டிய
காரணத்தினால் சுறுசுறுப்பாக நடக்கும் கப்பல் போக்குவரத்து இப்பொழுது தேங்கி நிற்கிறது.
இந்த இரண்டு நாள்
தேக்கம் காரணமாக சர்வதேச
கச்சா எண்ணெய் சந்தையில்
ஒரு சதவீத அளவுக்கு
விலை உயர்ந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
Video Explanation