HomeBlogவால் சேவல் வளர்ப்பு
- Advertisment -

வால் சேவல் வளர்ப்பு

Tail rooster breeding

வால் சேவல்
வளர்ப்பு

  • வால் சேவல்கள்
    சந்தையில் நல்ல விலைக்குப் போகின்றன.
  • தமிழகத்தில் பல்வேறு
    பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் பறவை
    இனம் வால் சேவல்
    ஆகும்.
  • வால் சேவல்கள்
    பல்வேறு பருவநிலைகளையும் நோய்களையும் தாங்கி வாழும் திறன்
    படைத்தவை.
  • நாட்டுரக சேவல்களான
    இவற்றை நோய்கள் எளிதில்
    தாக்காது என்பதால் வளர்க்க
    சிரமம் கிடையாது.
  • பார்க்க அழகான
    தோற்றம் கொண்டவையாக இருப்பதால் இவற்றை தற்போது வீடுகளில்
    அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். இந்த சேவல்களுக்கு எப்போதும்
    நல்ல விலை இருந்து
    வருகிறது.
  • வால் நீளம்
    மற்றும் நிறத்தை வைத்து
    இவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வால்சேவல்களின் உடல்
    ஆரோக்கியத்தை பொருத்து
  • இவற்றின் வால்களின்
    நீளமும் பளபளப்பும் அமையும்.

வால் சேவல்களின் உணவு:

  • இவற்றுக்கு சத்துள்ள தீவனத்தை கொடுத்து
    வளர்க்க வேண்டும். இந்த
    ரக சேவல் குஞ்சுகளை
    பெருவதற்கு இதே இனத்தை
    சேர்ந்த கோழிகளை வளர்த்து
    அதன் மூலம் பெற்றுக்
    கொள்ள வேண்டும்.
  • வால் சேவல்
    இனத்து கோழிகள் 1 கிலோ
    ரூ. 300 முதல் 350 வரை
    கிடைக்கின்றன. இவற்றை
    ரகம் பார்த்து வாங்கி
    சேவலுடன் இனப்பெருக்கம் செய்ய
    வேண்டும்.
  • சேவல் மற்றும்
    கோழி பராமரிக்க நாளொன்றுக்கு சுமார் 3 மணி நேரம்
    செலவிட வேண்டும். தீவனங்களை
    ஒரு கோழிக்கு 250 கிராம்
    அளவு ஒரு நாளைக்கு
    கொடுக்கலாம். இவற்றுடன் உணவுக்கழிவு, தவிடு, குருணை போன்றவற்றையும் சேர்த்துக் கொடுக்கலாம்.
  • காலை 1 மணி
    நேரம் சேவலுக்கு உணவளிப்பதோடு மாலை 2 மணிநேரம் கோழிகள்
    இடத்தை சுத்தம் செய்து
    அடைக்கும் பணியில் ஈடுபட
    வேண்டும்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -