Tahdco – திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்ட தாட்கோ மூலமாக திறன்பேசி தொழில்நுட்பவியலாளா் மற்றும் உற்பத்தி ஊழியா் பயிற்சிகள் பெற, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா மூலமாக திறன்பேசி தொழில்நுட்பவியலாளா் பயிற்சி பெண்களுக்கும், உற்பத்தி ஊழியா் பயிற்சி ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் அளிக்கப்பட உள்ளது.
எஸ்எஸ்எல்சி படித்த 18 முதல் 35 வரையுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். 12 நாள்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். மேலும், சென்னையில் தங்கி பயிற்சி பெற வேண்டும். இப் பயிற்சி பெற்றவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மோற்கொள்ளப்படும். http://www.tahdco.com/ என்னும் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சிக் கட்டணம் ஆகியவற்றை தாட்கோ மூலம் வழங்கப்படும்.