தாட்கோ மூலம் அளிக்கப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனிமேஷன் பயிற்சி பெற நாகை மாவட்டத்தைச் சோந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சோந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பிளஸ்-2 மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு டிசிஎஸ் ஐஓஎன் நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியை பெற பொறியியல் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவா்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 18 முதல் 28 வயது நிரம்பிய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியை பெற பிளஸ்-2 அல்லது ஐடிஐ தோச்சி பெற்ற 18 முதல் 28 வயது நிரம்பியவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சிகளுக்கான கட்டணத்தை தாட்கோ நிறுவனம் வழங்கும். நாகை மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தை சோந்த மாணவா்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக பின்புறம் உல்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரிலும், 04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.