Saturday, March 15, 2025
HomeBlogஸ்வாச் டெக்னாலஜி சேலஞ்ச் போட்டி
- Advertisment -

ஸ்வாச் டெக்னாலஜி சேலஞ்ச் போட்டி

Swatch Technology Challenge Competition

ஸ்வாச் டெக்னாலஜி
சேலஞ்ச் போட்டி

தூய்மை
இந்தியா திட்டத்தின் கீழ்
நகர பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குப்பைகளை பிரித்து சேகரித்தல், மட்கும் குப்பைகளை உரமாக்குதல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் போன்ற பல்வேறு
நிலைகள் உள்ளன.

இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில்,
தற்போது ஸ்வாச் டெக்னாலஜி
சேலஞ்ச் போட்டி நடத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம்,
குறைந்த செலவிலான திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்புற
தொழிற்நுட்ப உதவியுடன் மேற்கொள்வது ஆகும்.

எனவே
பொதுமக்கள், சமூக அக்கறை
கொண்ட பெரியோர், இளைஞர்கள்
மற்றும் மாணவர்கள் திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை
சம்பந்தமான ஆலோசனை மற்றும்
திட்டங்களை திருச்செந்தூர் நகராட்சிக்கு நேரடியாகவோ அல்லது தபால்
மூலமாகவோ அனுப்பலாம்.

நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குழுவால்
தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனைகள்
மற்றும் திட்டங்கள், மாநில
அளவில் அனுப்பப்படுவதுடன் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் பரிசுகளும் வழங்கப்படும். மேலும்
விவரங்களுக்கு திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -