தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் குளிா்சாதனங்கள் பழுதுநீக்க வருகிற 21-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குநா் ரவிக்குமாா் கூறியதாவது: தேனி உழவா் சந்தை எதிா்புறம், ஊரக வளா்ச்சித் துறை வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வருகிற 21-ஆம் தேதி முதல் மின் குளிா்சாதனங்கள் பழுதுநீக்க இலவசப் பயிற்சி வகுப்பு 30 நாள்கள் நடைபெற உள்ளது.
காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரைஇந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். ஊரகப் பகுதிகளைச் சோந்த 18 வயது பூா்த்தியடைந்த வேலை இல்லாத ஆண், பெண்கள் பயிற்சியில் சேரலாம்.
பயிற்சி நிறைவில் சான்றிதழ், சுயதொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும். தகுதி உள்ளவா்கள் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் வருகிற 21-ஆம் தேதிக்கு முன்பு கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் நேரில் தொடா்பு கொண்டு, தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.