LOGO–வை
டிசைன்
செய்து ரூ.50,000 சம்பாதிக்க சூப்பர் வாய்ப்பு
வீட்டில்
அமர்ந்தபடியே பணம்
ஈட்ட ஒரு மிகச்சிறந்த, பாதுகாப்பான வாய்ப்பு வந்துள்ளது. இதன் மூலம் நீங்கள்
50 ஆயிரம் ரூபாய் வரை
சம்பாதிக்கலாம்.
மோடி
அரசாங்கம் ஒரு சிறப்புப்
போட்டியை தொடங்கியுள்ளது. இதில்
நீங்கள், வீட்டில் அமர்ந்தபடியே ஒரு LOGO–வை
டிசைன் செய்ய வேண்டும்.
உங்கள் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால், நீங்கள் 50 ஆயிரம்
ரூபாய் பரிசு பெறலாம்.
இந்தப் போட்டியில் பங்கேற்று
இந்த பரிசை வெல்வதற்கான வழியை இங்கே காணலாம்.
இந்த
போட்டி பற்றிய தகவல்கள்
MyGov இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில்
விண்ணப்பிக்க, முதலில்
நீங்கள் இந்திய அரசின்
உணவு மற்றும் பொது
விநியோக அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட லோகோ வடிவமைப்பு போட்டியின் ஒரு பகுதியாக வேண்டும்.
இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க, 2021 செப்டம்பர் 17, அதாவது
இன்றே கடைசி நாளாகும்.
இந்தப் போட்டியில் வெற்றி
பெறுபவருக்கு ரூ.50,000/-
பரிசாக வழங்கப்படும்.
ஐக்கிய
நாடுகள் பொதுச் சபை
ஒருமனதாக இந்தியா வழங்கிய
தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்
கீழ் 2023 சர்வதேச தினை
(Millets) ஆண்டாக அறிவிக்கப்பட்டது. 70 க்கும்
மேற்பட்ட நாடுகள் இந்த
திட்டத்தை ஆதரித்தன. இதைக்
கருத்தில் கொண்டு, இந்தப்
போட்டியை விவசாயம் மற்றும்
விவசாயிகள் நல அமைச்சகம்
நடத்துகிறது.
இந்த
முக்கியமான தருணத்தைக் குறிக்கும் வகையில், ‘சர்வதேச தினை
ஆண்டு 2023′ என்ற கருத்தில்,
இந்திய அரசு பொருத்தமான லோகோ மற்றும் ஸ்லோகன்/டேக்லைன்–ஐ
வெளியிடும். இதற்காக கவர்ச்சிகரமான மற்றும் நேர்த்தியான லோகோ/டேக்லைனை
உருவாக்க பொது மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு
வந்துள்ளது.
பருவநிலை
மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடினமான
சூழ்நிலைகளில் தினை
பயிர்களின் ஆரோக்கிய நன்மைகள்
மற்றும் வேளான் சாகுபடிக்கு அவற்றின் பயன்பாடு ஆகியவை
பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில்,
முதல் பரிசு பெறும்
போட்டியாளருக்கு ரூ
.50,000 மற்றும் போட்டியில் வெற்றி
பெற்றதற்கான மின் சான்றிதழ்
வழங்கப்படும். இதைத்
தவிர இதில் பங்கேற்று
நல்ல வடிவமைப்புகளை வழங்கும்
மேலும் மூவருக்கும் பரிசு
வழங்கப்படும். இவர்கள்
அனைவருக்கும் மின்
சான்றிதழ்கள் வழங்கப்படும். இவைதான் இந்த போட்டியின் மூன்று வகைகள்.
எப்படி பதிவு செய்வது?
- போட்டியில் பங்கேற்க, நீங்கள் முதலில்
www.myGov.in போர்ட்டலுக்கு செல்ல
வேண்டும். - போட்டிக்குச் சென்று
Login to participate என்பதை கிளிக் செய்ய
வேண்டும். - பிறகு நீங்கள்
பதிவு விவரங்களை இங்கே
நிரப்ப வேண்டும். - பதிவுசெய்த பிறகு,
போட்டிக்கான உங்கள் பதிவை
சமர்ப்பிக்க வேண்டும்.