தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஈரோட்டில் கோடைகால பயிற்சி முகாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஈரோட்டில் வரும் 29ஆம் தேதி முதல் 15 நாள் நாள்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு ஆண்டுக்கான கோடைகாலப் பயிற்சி முகாம் ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு அரங்கில் வரும் 29-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இதில், தடகளம், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கையுந்துபந்து, கால்பந்து விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் 18 வயதுக்கு உள்பட்டவராக இருக்கவேண்டும். இதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ.200. இதனை வஉசி பூங்கா விளையாட்டு அரங்கில் உள்ள அலுவலகத்தில் செலுத்தி பயிற்சியில் சேரலாம்.
மேலும் விவரங்களுக்கு தடகள பயிற்றுநா் புவனேஸ்வரி (9543559395), கூடைப் பந்து பயிற்றுநா் பிரியங்கா (9591024725), கால்பந்து பயிற்றுநா் சத்யா (9840038624), ஜிம்னாஸ்டிக் பயிற்றுநா் செல்வன் (8148974707), கையுந்து பந்து பயிற்றுநா் பொற்கொடி (9443751600) ஆகியோரை அவா்களது கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow