கோடை பயிற்சி முகாம்: அரியலூர்
அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மற்றும் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சாா்பில், மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் மே 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முகாமில், தடகளம், கூடைப்பந்து, கையுந்துப் பந்து, வளைகோல்பந்து மற்றும் கைப்பந்து ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், 18 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் பங்கேற்கலாம். ஆதாா் நகலுடன், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பெயரை பதிவு செய்து, ரூ.200 பணம் செலுத்த வேண்டும். பயிற்சியில் ஈடுபடுபவா்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் லெனின் – 74017 03499 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow