கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் நல மையம் சாா்பில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் வரும் 18-ஆம் தேதி தொடங்குகிறது.
மே 18- ஆம் தேதி தொடங்கி 20 நாள்களுக்கு நடைபெறும் இந்த முகாம் தினசரி காலை, மாலை வேளைகளில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பெண்களுக்கு தனியாக மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பயிற்சி நடைபெறுகிறது.
வெளிநபா்களுக்கு 3,068 ரூபாயும், பல்கலைக்கழகப் பணியாளா்கள், அவா்களின் குழந்தைகளுக்கு ரூ.2,006-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் உடற்கல்வி துணை இயக்குநா் ஜெ.பி.தேசிக சீனிவாசனை 99405 15222 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow