கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை (ஏப். 29) தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 15 நாள்கள் நடைபெற உள்ளது. கால்பந்து, வில்வித்தை, தடகளம், வாள் சண்டை, இறகுபந்து, கையுந்து பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகள் ஏப். 29 முதல் மே 13 வரையில், மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவியா் அல்லாதோா் கலந்து கொள்ளலாம். கோடைகால பயிற்சி முகாமில், காலை 6 மணி முதல் 8 வரையிலும் மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் பங்கேற்கலாம். இதற்கான பயிற்சி கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும்.
இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவா்கள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம். கலந்துகொள்ளும் அனைவரும் ஆதாா் அட்டை நகல் கண்டிப்பாக சமா்ப்பித்தல் வேண்டும். அனைவருக்கும் பங்கு பெற்ற்கான சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் கைப்பேசி எண்: 74017-03492, மற்றும் கையுந்து பயிற்சியாளா் 85086- 41786 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow