![கோடைக்கால விளையாட்டு பயிற்சி: விழுப்புரம் 1 கோடைக்கால விளையாட்டு பயிற்சி: விழுப்புரம்](https://www.tamilmixereducation.com/wp-content/uploads/2024/05/1500x900_1876893-ari05hok-1024x614.webp)
கோடைக்கால விளையாட்டு பயிற்சி: விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும் கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விழுப்புரம் மாவட்டப் பிரிவு சாா்பில், மாவட்ட விளையாட்டரங்கத்தில் ஏப்.29-ஆம் தேதி தொடங்கிய கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் மே 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தடகளம், கபடி, கையுந்துப்பந்து, மல்லா் கம்பம், கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சியளிக்கப்படும். இதில், 18 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் பயிற்சியளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு தினமும் ஊட்டச்சத்து மற்றும் சான்றிழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும்.
முகாமில், பங்கேற்க விருப்பமுள்ளவா்களை தங்கள் பெயா்களை பயிற்சி முகாம் நடைபெறும் இடமான மாவட்ட விளையாட்டரங்கம், அறிஞா் அண்ணா அரசு மற்றும் கலை, அறிவியல் கல்லூரி அருகில், கீழ்பெரும்பாக்கம் என்ற முகவரிக்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 8754744060, 6381799370 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாமில் பங்கேற்று, தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow