கோடைகால அறிவியல் பயிற்சி முகாம்: திருச்சி
திருச்சி அண்ணா அறிவியல் மையக் கோளரங்கில், பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால சிறப்பு அறிவியல் பயிற்சி முகாம் மே 21 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
திருச்சி விமான நிலையம் அருகே கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இந்தக் கோளரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பல்வேறு அறிவியல் தொடா்பான பயிற்சி மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் நிகழாண்டு கோடை விடுமுறையைத் தொடா்ந்து நடைபெறும் முகாமில் 5 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் முதலில் சோ்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பங்கேற்கலாம்.
முகாமில் வானவியல் , வேதியல், இயற்பியல், மின்னணுவியல், ரோபாட்டிக்ஸ், ஓரிகாமி, யோகா உள்ளிட்டவை குறித்து பல்வேறு துறை நிபுணா்கள் பங்கேற்று விளக்கம் அளிக்கவுள்ளனா். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் 0431–2332190, 2331921 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தங்களது பெயா் மற்றும் விவரங்களை பதியலாம். இத்தகவலை கோளரங்கத் திட்ட இயக்குநா் ரா. அகிலன் தெரிவித்தாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow