முருங்கை கீரை
வாயிலாக கணிசமான வருவாய்
செடி
முருங்கை சாகுபடி குறித்து,
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதுார் கிராமம் மகிழ்
பண்ணைய நிர்வாகி பிரதீப்
கூறியதாவது:எங்களுக்கு சொந்தமான
சவுடு கலந்த களி
மண் பூமியில், பல
ரக முருங்கை செடிகளை
சாகுபடி செய்துள்ளேன்.
செடிகளின்
இடைவெளிக்கு ஏற்ப, சொட்டு
நீர் பாசன கருவிகளை
அமைத்துள்ளேன்.முருங்கை
காயில் எதிர்பார்த்த மகசூல்
மற்றும் வருவாய் கிடைக்கவில்லை. இருப்பினும், முருங்கை கீரை
வாயிலாக கணிசமான வருவாய்
ஈட்டி வருகிறேன்.முருங்கை
இலைகளை உலர்த்தி விற்பனை
செய்தால், நல்ல வருவாய்
ஈட்டலாம்.
இன்னும்
நாங்கள் அந்த முயற்சியில் இறங்கவில்லை.முருங்கை சாகுபடியில் ஒவ்வொரு தொழில் நுட்பத்தையும் கற்று வருகிறோம்.விற்பனை
திறன் மற்றும் இலைகளை
உலர்த்தி பதப்படுத்தும் திறன்
இருந்தால், செடி முருங்கையில் நல்ல வருவாய் ஈட்டலாம்.
பண்ணை தொழிலுக்கு செடி
முருங்கை சாகுபடி சவுகரியமாக இருக்கும்.
தொடர்புக்கு: 80569 85510