மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில்
குளம் அமைக்க மானியம்
வழங்கப்படும்
செங்கல்பட்டு மாவட்டத்தில், மீன்
வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில்
குளம் அமைக்க மானியம்
வழங்கப்படும் என
கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2021-2022ம்
ஆண்டுக்கான பிரதம மந்திரி
மட்சய சம்படா யோஜனா
திட்டத்தின் கீழ் (PMMSY) மீன்
வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாக,
ஒரு அலகு உயிர்
கூழ்ம திரள் குளம்
அமைக்க மற்றும் உள்ளீட்டுக்கு ஆகும் மொத்த செலவினம்
ரூ.18 லட்சத்தில், பொதுப்பிரிவினருக்கு 40 விழுக்காடு மானியம்
வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர், காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம்
மற்றும் மீனவர் நலத்துறை
உதவி இயக்குநர் அலுவலகம்,
எண்1/269, கிழக்கு கடற்கரை
சாலை, சின்ன நீலாங்கரை,
சென்னை 600 115 (அலுவலக தொலைப்பேசி 044-24492719 செல்போன் 79045 50525, 98946 21231) அலுவலகத்தை நேரில்
தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அதிக
விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதி
அடிப்படையில் பயனாளிகள்
தேர்வு செய்யப்படுவார்கள்.