தாட்கோ மூலம்
விவசாயிகளுக்கு மானியம்
தாட்கோ
நிறுவனம் சார்பில் ஆதி
திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.
இந்த
விவசாயிகள் பி.வி.சி.,
குழாய் வாங்க, 15 ஆயிரம்
ரூபாய், புதிய மோட்டார்
வாங்க 10 ஆயிரம் ரூபாயும்
மானியம் வழங்கப்படுகிறது. குடும்ப
ஆண்டு வருமானம் 2 லட்சம்
ரூபாய்க்குள் இருக்க
வேண்டும். விவசாயத்தை மட்டுமே
தொழிலாக கொண்டிருக்க வேண்டும்.துரித
மின் இணைப்பு திட்டத்தில் விண்ணப்பித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். ஏற்கனவே
தாட்கோ திட்டத்தில், நிலம்
வாங்குதல், மேம்படுத்துதல் போன்றவற்றில் பயன் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர் ஜாதி சான்று, வருமான
சான்று, ரேஷன் அட்டை,
இருப்பிட சான்று, பட்டா,
சிட்டா, அடங்கல் உள்ளிட்ட
உரிய ஆவணங்கள், விலைப்புள்ளி உள்ளிட்டவற்றுடன், தாட்கோ
இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும்
விவரங்களுக்கு தாட்கோ
அலுவலகத்தை 0421 297 1112 எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்,.