TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
குளங்களில் மீன்
வளா்ப்பதற்கு மானியம்
பிரதமரின்
மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் பயோ பிளாக் குளங்களில் மீன் வளா்க்க ரூ.
3 லட்சம் வரை மானியம்
பெற விண்ணப்பிக்கலாம் என
ஆட்சியா் ப. ஸ்ரீ
வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின்
மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சிறிய அளவிலான பயோ
பிளாக் குளங்களில் மீன்
வளா்க்க செலவினத் தொகை
ரூ. 7.50 லட்சத்தில், பொது
பிரிவினருக்கு 40 சதவீதம்
மானியமாக ரூ. 3 லட்சம்
மானியத் தொகை வழங்கப்படும். மேற்கண்ட மானியத் தொகையானது,
பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்துக்கு முன்னுரிமை அளித்து,
மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெற தோந்தெடுக்கப்படுவார்கள் .
எனவே,
இத் திட்டத்தின் கீழ்
விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் பெரம்பலூா், அரியலூா்
மீன்வளம் மற்றும் மீனவா்
நலத்துறை உதவி இயக்குநா்
அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு விண்ணப்பத்தை பூா்த்தி
செய்து, உரிய ஆவணங்களுடன் ஆக. 31ம்(30.08.2022) தேதிக்குள் உதவி
இயக்குநா், மீன்வளம் மற்றும்
மீனவா் நலத்துறை, அரியலூா்
அலுவலகம், அறை எண்–
234/2 ஆவது மேல்தளம், ஆட்சியா்
அலுவலகக் கட்டடம், அரியலூா்-621704,
(தொலைபேசி எண்–04329-228699),
மீன்வள ஆய்வாளா், மீன்வளம்
மற்றும் மீனவா் நலத்துறை
பெரம்பலூா் அலுவலகம், எஸ்.கே.சி
காம்ப்ளக்ஸ், மேல்தளம்– 621212 (04329-228699,
6381344399) என்னும் அலுவலக முகவரிகளில் அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow