Sunday, December 22, 2024
HomeBlogமாணவர்கள் 2 ஆண்டுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

மாணவர்கள் 2 ஆண்டுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Students can apply for an incentive of Rs.1,500 per month for 2 years

TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக செய்திகள்

மாணவர்கள் 2 ஆண்டுக்கு
மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பள்ளி
மாணவர்களுக்கு தமிழக
அரசு சார்பில் மாதம்
1500
ரூபாய் உதவித்தொகை பெற
விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி
மாணவர்களின் அறிவியல், கணிதம்
சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு
பெறுவதைப்போன்று தமிழ்
மொழி இலக்கியத்திறனை மாணவர்கள்
மேம்படுத்திக்கொள்ளும் வகையில்
2022-2023
ம் கல்வியாண்டு முதல்
தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

இத்தேர்வில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம்
மாதம் ரூபாய் 1,500 வீதம்
இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தேர்வில் 50% அரசுப்பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள
50%
டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள்
உள்ளிட்ட பிற தனியார்
பள்ளி மாணவர்களும் தேர்வு
செய்யப்படுவர்.

தமிழக
அரசின் 10ம் வகுப்பு
தர நிலையில் உள்ள
தமிழ்ப்பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு
நடத்தப்படும். அனைத்து
மாவட்டங்களிலும் மாவட்டத்தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2022-2023ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு
மாணவர்களுக்கு அக்டோபர்
1
ம் தேதி அன்று
தேர்வு நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும்
பள்ளியின் மூலமாக மட்டுமே
விண்ணப்பிக்க இயலும்.
எனவே, மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற
இணையதளம் மூலம் வரும்
செப்டம்பர் 9 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து
சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -