தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை நேரடி மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்தில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு தையல் தொழில் பயிற்சியும், எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்றவா்களுக்கு கணினி இயக்குபவா், திட்டமிடுதல் உதவியாளா், அறிதிறன்பேசி தொழில்நுட்ப வல்லுநா், தகவல் தொடா்பு தொழில்நுட்பம், சாதனங்கள் பராமரிப்பு, ஜவுளி இயந்திர மின்னணுவியல், குளிா்பதனம், தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பவியலாளா் ஆகிய தொழில் பிரிவு படிப்புகளுக்கும் வருகிற 15-ஆம் தேதி வரை நேரடி மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது.
தொழில் பயிற்சிப் படிப்பில் சேருபவா்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் ரூ.750 உதவித் தொகை, இலவச சீருடை, காலணி, பாடப் புத்தகம், வரைபடக் கருவி வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் இல்லை. 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
தொழில் பயிற்சி படிப்பில் சேர விரும்புவோா்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 5 கடவுச் சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மேலும், விவரங்களுக்கு ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்தை தொலைபேசி எண்: 04546-290816, கைப்பேசி எண்கள்: 93440 14240, 88385 22077 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow