Architect படிப்பில்
மாணவர் சேர்க்கை – முழு
தகவல்கள்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Architect என்னும்
கட்டடவியல் படிப்புகளில் மாணவர்
சேர்க்கைக்கு நேஷனல்
ஆப்டிடியூட் டெஸ்ட் இன்
ஆர்கிடெக்சர் என்னும்
நுழைவுத் தேர்வை எழுத
வேண்டும். ‘கவுன்சில் ஆப்
Architecture’ வாரியம்
பி.ஆர்க்., படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்துகிறது. படிப்பை முடித்த மாணவர்கள்
‘கவுன்சில் ஆப் Architect வாரியத்தில் தங்களை பதிவு
செய்தால் மட்டுமே ‘Architect ஆக பணிபுரிய முடியும்.
Architect படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் 12-ம் வகுப்பில்
கணிதம், இயற்பியல், வேதியியல்,
பாடங்கள் படித்திருக்க வேண்டும்
அல்லது கணித பாடத்துடன் டிப்ளமோ படிப்பை படித்திருக்க வேண்டும். மாணவர்கள் இந்த
அப்படிப்புகளில் குறைந்தது
50% மதிபெண்க்ளை பெற்றிருக்க வேண்டும்.
நாட்டா தேர்வுகள் வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படுகிறது. மாணவர்கள் இரண்டு முறையும்
தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
நடப்பு
ஆண்டுக்கான முதல் கட்ட
தேர்வுகள் ஏப்ரல் 10-ம்
தேதி நடக்கிறது. முதல்கட்ட
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 28-ம் தேதி
கடைசி நாளாகும். இரண்டாம்
கட்ட தேர்வுகள் ஜூன்
12-ம் தேதி நடக்க
இருக்கிறது. இரண்டாம் கட்ட
தேர்வுக்கு விண்ணப்பிக்க மே
30-ம் தேதி கடைசி
நாளாகும்.
நாட்டா தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்கள் www.nata.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.