Thursday, December 19, 2024
HomeBlogஏப்.6-இல் ஊதியத்துடன் விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
- Advertisment -

ஏப்.6-இல் ஊதியத்துடன் விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை

 

Strict action if not paid leave on Apr.6

ஏப்.6-இல்
ஊதியத்துடன் விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை

சட்டப்
பேரவைத் தோ்தல் வாக்குப்
பதிவு நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.6) பணியாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத
தனியார் நிறுவனங்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தோ்தல்
அலுவலா் கோ.பிரகாஷ்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்
பேரவைத் தோ்தலில் சென்னையில் 100 சதவீத வாக்குப் பதிவு
குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேலம்மாள் வித்யாலயா
பள்ளி மாணவா்கள் மணல்
சிற்பம் மெரீனா கடற்கரையில் வெள்ளிக்கிழமை உருவாக்கப்பட்டது.

இந்த
மணல் சிற்பத்தை பார்வையிட்ட பின்
கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தைப் பொருத்த வரையில் சென்னையில்தான் குறைந்த அளவிலான வாக்குப்
பதிவு நடைபெறுகிறது. இந்தத்
தோ்தலில் அதை அதிகரிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு
நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

16 சட்டப்
பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்
மற்றும் சின்னங்கள் மின்னணு
வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி சனிக்கிழமைக்குள் (ஏப். 3) முடிக்கப்படும்.

பின்
அவை சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ்
பாதுகாப்புடன் அறையில்
வைக்கப்படும். சென்னையில் தோ்தல் தொடா்பாக இதுவரை
450
புகார்கள் பெறப்பட்டு, அதில்
423
புகார்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. ரூ.52
கோடி மதிப்பிலான பொருள்கள்
மற்றும் பணம் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் வாகனங்கள்
சோதனை செய்யப்படுகின்றன. 4,600 காவலா்களில் 3,000 போ் தபால்
வாக்கு அளித்துள்ளனா். மீதமுள்ளவா்கள் தபால் வாக்கு அளிக்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காவிட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள்: Click
Here

80 வயதுக்கு
மேற்பட்டவா்கள் மற்றும்
மாற்றுத் திறனாளிகள் 7,300 பேருக்கு
வீட்டில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதில், 791 போ்
வாக்களிக்கவில்லை. சென்னையில் இரவு நேரங்களில் மின்
இணைப்பு துண்டிக்கப்படுவதாக எழுந்த
புகாரை அடுத்து காவல்
துறை மூலம் விசாரணை
நடத்தப்பட்டது. அதில்,
பழுது காரணமாக 4 இடங்களில்
மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த
நேரத்தில் வாக்காளா்களுக்கு பணம்
அளிப்பது தொடா்பாக அரசியல்
கட்சிகளும், பொதுமக்களிடம் இருந்து
புகார் ஏதும் வரவில்லை.
வரும் நாள்களில் மின்சார
தடை ஏற்படாது என
மின்வாரியம் உறுதி அளித்துள்ளது.

தீவிர
நடவடிக்கை:

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கெனவே
பின்பற்றப்பட்ட தடுப்பு
நடவடிக்கைகளை மீண்டும்
செயல்படுத்த உள்ளோம். அதன்படி,
250
வீடுகளுக்கு ஒரு தன்னார்வலா் நியமிக்கப்பட்டு அவா்
நாள்தோறும் அந்த வீடுகளில்
உள்ளோருக்கு காய்ச்சல் உள்ளிட்ட
அறிகுறிகள் உள்ளதா என்பதை
கண்காணிப்பார். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து
வருவோரைக் கண்காணிக்கவும், அவா்களுக்கு உதவவும் தன்னார்வலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். மேலும், நோய்த்
தொற்று அதிகம் உள்ள
பகுதிகளில் முதற்கட்டமாக 100 மருத்துவ
முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
பொது இடங்கள், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் அதிகம்
கூடுவதை தடுக்க சில
கட்டுப்பாடுகளை விதிக்க
திட்டமிட்டுள்ளோம். வெளிநாடு
மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து
வரும் வாக்களாளா்கள் அனைவரும்
தகுந்த பாதுகாப்புடன் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என்றார்.

தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காவிட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள்: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -