முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில், முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அதற்கு, முதல் தலைமுறை பட்டதாரி எனும் சான்றிதழ் பெற வேண்டும். இது தொடர்பாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெற வயது வரம்பு இல்லை. தவறான தகவல் அளித்து சான்று பெற்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.அளிக்கப்பட்ட சலுகைகள் மூன்று மடங்காக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து அல்லது அவர்களின் பெற்றோரிடம் இருந்து வசூலிக்கப்படும். வேலை பெற்றிருந்தால் மொத்த முழு ஊதியத்தையும் திரும்ப வசூலிக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.