TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
வேளாண்மைக் கல்லூரியில் மாநில அளவிலான உழவா் தின விழா
மதுரை வேளாண்மைக் கல்லூரியில் மாநில அளவிலான உழவா் தினவிழா வருகிற 14 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோவையிலிருந்து காணொலி வாயிலாக, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்
பொன்
விழா
நிகழ்வுகளின்
ஒரு
பகுதியாக,
மாநில
அளவிலான
உழவா்
தின
விழா
மதுரை
வேளாண்மைக்
கல்லூரியில்
அக்டோபா்
14 முதல்
16ம்
தேதி
வரை
நடைபெறுகிறது.
வேளாண்மைப் பல்கலை.யுடன் பல்வேறு அரசுத் துறைகள், தேசிய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், விவசாய அமைப்புகளுடன்
இணைந்து
இவ்விழா
நடத்தப்படும்.
உழவா் தின விழாவை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்
தொடக்கி
வைக்கிறார்.
தமிழக
அமைச்சா்கள்,
சட்டப்பேரவை,
மக்களவை
உறுப்பினா்கள்
பங்கேற்கின்றனா்.
கடந்த ஆண்டில் 17 புதிய பயிர் ரகங்களை வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கண்டுபிடித்தது.
புதிய
பயிர்
ரகங்கள்,
வேளாண்
தொழில்நுட்பங்கள்,
பண்ணைக்
கருவிகள்
உழவா்
தின
விழாவில்
அறிமுகம்
செய்யப்படும்.
புதிய வேளாண் தொழில்நுட்பங்கள்
குறித்தும்,
விவசாயிகள்
சந்திக்கும்
பிரச்னைகள்
தொடா்பாகவும்
3 நாள்களிலும்
பல்வேறு
தலைப்புகளில்
கருத்தரங்குகள்
நடைபெறவுள்ளன.
விவசாயிகளின்
அறிவுத்
திறன்,
செயல்திறனை
மேம்படுத்தும்
வகையில்,
வேளாண்மை,
தோட்டக்கலை,
வேளாண்
பொறியியல்,
வனவியல்,
மனையியல்
ஆகிய
துறைகளைச்
சார்ந்த
தொழில்நுட்பங்கள்
குறித்த
செயல்விளக்கங்களும்
செய்து
காண்பிக்கப்படும்.
பயிர் விதைகள், நாற்றுகள், பண்ணைக் கருவி, உயிர் உரங்கள், வளா்ச்சி ஊக்கிகள் போன்ற இடுபொருள்கள்
விற்பனை
செய்யப்படும்.
சிறந்த விவசாயிகளை ஊக்குவிக்கும்
வகையில்
விருதுகள்
வழங்கப்படவுள்ளன.
3 நாள்களிலும்,
தமிழகம்
முழுவதும்
இருந்தும்
சுமார்
30 ஆயிரம்
விவசாயிகள்
பங்கேற்பா்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் 75 வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள்
உள்ளன.
இவற்றில்
தமிழ்நாடு
வேளாண்மைப்
பல்கலைக்கழகம்
8வது
இடத்தில்
இருக்கிறது.
அடுத்த
தரவரிசைப்
பட்டியல்
வெளியிடப்படும்போது,
தமிழ்நாடு
வேளாண்மைப்
பல்கலைக்கழகம்
மேலும்
முன்னேற்ற
நிலையை
அடையும்
வகையில்
செயல்
திட்டங்கள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.